சீனாவில் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிருக்கான பாய்மர படகு நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் சார்பாக இந்திய பாய்மர படகு வீராங்கனை நேஹா தாக்கூர் பங்குபெற்றார்.
போபாலின் தேசிய படகோட்டும் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் வீராங்கனையான நேஹா, மொத்தம் 32 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
இதன் மூலம் இந்தியா பாய்மர படகில் தனது முதல் பதக்கத்தை வென்றது. மேலும் தாய்லாந்து அணி தங்கப்பதக்கமும் சிங்கப்பூர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.