தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

ரோஜ்கர் மேளாவில் பணி ஆணை பெற்றவர்களுக்கு அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழில்நுட்ப மாற்றம் நிர்வாகத்தை எவ்வாறு எளிதாக்கியது என்பதை கடந்த 9 ஆண்டுகளாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள். எனவே, புதிதாக பணியில் சேர்பவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கர் மேளா என்கிற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, புதிய எண்ணம், உள்ளடக்க கண்காணிப்பு, பணி முறை அமலாக்கம் மற்றும் வெகுஜன பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெரிய இலக்குகளை அடையும் வகையில் தனது அரசாங்கம் செயல்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.

இத்திட்டத்தின் மூலம், தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, அமைச்சகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசு பணியில் சேருவார்கள்.

அந்த வகையில், ரோஜ்கர் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாடு, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாறத் தீர்மானித்திருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில், நாம் 3-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கப் போகிறோம். இந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு அரசு ஊழியரும் மிகப்பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள். நீங்கள் எப்போதுமே இந்த நாட்டின் குடிமகன் என்கிற மனப்பான்மையுடன், இந்த நாட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில், தொழில்நுட்ப மாற்றம் எவ்வாறு நிர்வாகத்தை எளிதாக்கி இருக்கிறது என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். முன்னதாக, ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் கவுன்ட்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த சிக்கலை தொழில்நுட்பம் நீக்கியது. அதேபோல, ஆதார் அட்டைகள், டிஜிட்டல் லாக்கர்கள் ஆகிய ஆவணங்கள் சிக்கலான தன்மையை நீக்கிவிட்டன.

ஆகவே, பணி இடத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களின் மீதும் உள்ளது. உங்களைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போது, ​​கொள்கைகளைச் செயல்படுத்தும் வேகமும் அளவும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

Tags: PM ModiRozgar mela51000 youths
Share
Tweet
SendShare
Previous Post

லிபியாவில் அணை உடைப்பு – லிபியாவில் 8 பேர் கைது

Next Post

ஆசியா விளையாட்டு : பாய்மரப் படகு இந்தியாவிற்கு வெள்ளி !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies