தமிழகம் முழுவதும் மணல் குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்த்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தஞ்சை மாவட்டம் ஒரத்தாடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சண்முகம் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றுகிறது.
இந்த சண்முகம் கடந்த அதிமுக ஆட்சியில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு நெருக்கமாக இருந்தாராம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், திமுக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமான நபராக வலம் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சண்முகத்தின் தொழில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே, அமலாக்கத்துறையினர், தஞ்சை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தை சுற்றி வளைத்து ரண்டு கட்டி சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டுக்கும், அந்த ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டிக் கழித்துப் பாருங்கள் கணக்கு சரியாக வரும் என்பதுதான் இதற்கு அமலாக்கத்துறை சொல்லும் ஒரே பதில்.