பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் 13-வது இந்திய-பசிபிக் இராணுவத் தலைவர்கள் மாநாடு இன்று நடைப்பெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்நிகழ்வு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,
இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “அமைதிக்காக ஒன்றாக: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துதல் எனக் கூறினார்.
இந்திய-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்தார். “இந்தோ-பசிபிக் ஒரு முக்கிய புவிசார் அரசியல் பிராந்தியமாக வளர்ந்துள்ளது. எல்லை தகராறுகள் மற்றும் கடற்கொள்ளையர் போன்ற சிக்கலான பாதுகாப்பு சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது,” என்று கூறினார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் உரிய முக்கியத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டது பெரும் வெற்றியாகும். பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி, செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை நமது பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்” எனக் கூறினார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் கடல்சார் வர்த்தகம், தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, அது பரந்த அரசியல், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர பரிமாணங்களையும் கொண்டுள்ளது என்று கூறினார்.
இப்பகுதியில் நிலப் படைகளுக்கான இராணுவம், கடற்படையினர், முதலியனவற்றிற்கு மிகப்பெரிய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் நட்புறவு மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதே இந்த சந்திப்புகளின் நோக்கமாகும் எனக் கூறினார். அனைத்து உறுப்பு நாடுகளின் ஜி-20 தலைவர்களுக்கான தீர்மானம் ஒரு பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது என கூறினார்.