ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் மதிய உணவு திட்டத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராஜஸ்தான் அரசில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு அடுத்து அதிகாரம் பெற்றவராக இருப்பவர் ராஜேந்தர் சிங் யாதவ். உள்துறை, நீதித்துறை, உயர்கல்வி, திட்டத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் இவரிடம் உள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள கோட்புட்லி தொகுதியில் இருந்து தேர்வான இவர் மீது, மதிய உணவு திட்டத்தில் நடந்த முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ள புகாரின் அடிப்படையில் ராஜேந்தர் சிங் யாதவ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனால், அவரது வீட்டிற்குள் செல்லவும், அதில் இருந்து வெளியேறவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அவர் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7 மணிக்கு தொடங்கிய தேடுதல் வேட்டை மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதனால் அப்பகுதியல் சிறுது பரபரப்பு ஏற்ப்பட்டது.