ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

சிந்த்வாரா மாவட்டத்தில் கணக்கை திறக்க முடியாது என்று சவால்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 07:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா தகர்க்கப்படும். மேலும், சிந்த்வாரா மாவட்டத்தில் அக்கட்சி தனது கணக்கைத் திறக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஹலாத் சிங் படேல் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தாமோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான பிரஹலாத் சிங் படேல், சிந்த்வாரா மாவட்டம் நரசிங்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்தான், காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா தகர்க்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறுகையில், “முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். கட்சியின் இந்த முடிவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவதாக, எனது ஜென்மபூமி மற்றும் கர்மபூமியில் முதல் முறையாக போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் 2003 சட்டமன்றத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். அப்போது, காங்கிரஸ் கட்சி சிந்த்வாரா மாவட்டத்தில் கணக்கைக்கூட திறக்கவில்லை. அதேபோல, 2023 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி சிந்த்வாராவில் கணக்கைத் திறக்காது என்ற எனது உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறேன். காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா இங்கு தகர்க்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

பிரஹலாத் சிங் படேல் தவிர, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங், மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோரும் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpMadya Pradeshcandidate
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Next Post

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies