தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கனிமவளங்கள் கொண்டு செல்லலாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கோவை மாவட்டம் வாளையார், தேனி மாவட்டம் கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
அதாவது, சுமார் 10 முதல் 12 சக்கரங்கள் கொண்ட லாரிகளில் இவைகள் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கனிமவளங்கள் கொண்டு செல்லக் கூடாது என தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு, 10 முதல் 12 சக்கரங்கள் கொண்ட லாரிகளில் கனிமவளங்கள் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என பாஜியு ஜோசப் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளாவிற்குக் கனிமங்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு ஏற்கனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்த உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.