“தி போல் லேடி” சமூக வலைதளங்களில் யார் சிறந்த முட்டாள் எனக் கருத்துக் கணிப்பு.நடத்தியுள்ளார். அதில், கன்னடியப் பிரதமருக்கும், பாரத எம்பி ராகுலுக்கும் இடையேதான் கடும் போட்டி. இதில், ஜஸ்டின் ட்ரூடோ 35.2 சதவீதமும், ராகுல் காந்தி 64.8 சதவீதமும் பெற்றுள்ளனர்.
அதாவது, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திக்கு எப்படி பஞ்சம் இல்லையோ, அது போல் காமெடி செய்திகளுக்கும் பஞ்சம் இருந்தது இல்லை. அப்படி ஒரு காமெடி செய்தியைத்தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். அது என்னவென்றால், கன்னடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பாரத நாட்டின் எம்பியான ராகுல் காந்தியும் செய்யும் சேட்டைகள், சமூக வலைதளங்களில் பட்டைய கிளப்புகின்றன.
முதலில் இருவருக்குமான ஒற்றுமையைப் பார்த்துவிடுவோம். கன்னடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேபோல, ராகுல் காந்தியும் அரசியல் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவர். உதாரணத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தவர். அதேபோல, ராகுலின் தந்தை, பாட்டி, கொள்ளு தாத்தா ஆகியோர் பிரதமராக வலம் வந்தர்கள். இப்படி இவருக்குள் ஒரு அபார ஒற்றுமை உள்ளது. இது எல்லாம் சீரியஸான விஷயம். பட், காமெடிக காட்சிகளுக்கும் உண்டு.
அது, என்னவென்றால், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, கம்ப்யூட்டரில் விரைவான பாடம் எடுத்தார். அதுபோலவே ராகுலும் ஒரு கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசினார். ஆனால் அது, அதுவல்ல என்பதுதான் ஹைலைட்.
மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், கனடா பிரதமர் ட்ரூடோ பாக்ஸிங் விளையாடுவது போல் புகைப்படம் வெளியானது. அதற்குச் சற்றும் சளைக்காமல் ஜப்பானிய தற்காப்புக் கலையான ஐகிடோவில் கருப்பு பெல்ட் பெற்ற நிபுணராக ராகுல் காந்தி தன்னைக் காட்டிக்கொண்டார். இப்படி ஏராளமான உதாரணங்கள்.
இப்படி இவர்கள் இருவருமே தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம் வருகிறார்கள் என்பதுதான், விளையாட்டான செய்தி ஸாரி, வேதனையான செய்தி.