ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!
Aug 15, 2025, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

திறன்மேம்பாட்டுப் பள்ளித்திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணித்தார்!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 08:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் சோட்டா உதய்பூர், போடேலியில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.5200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திறன்மேம்பாட்டுப் பள்ளித் திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணித்து, ‘வித்யா சமிக்சா கேந்திரா 2.0’ மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கூட்டதில் உரையாற்றிய பிரதமர்மோடி,  அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி சமூகத்தின் சூழ்நிலைகள் மற்றும் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக அறிந்திருப்பதாக அவர் கூறினார். அதிகாரப்பூர்வ பொறுப்புகளை ஏற்றபோது இப்பகுதி மற்றும் பிற பழங்குடி பகுதிகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைப் பற்றி கூறினார்.

தனது பதவிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களின் நேர்மறையான தாக்கத்தைக் கண்டு திருப்தி தெரிவித்தார். முதல் முறையாக பள்ளியைப் பார்த்த அந்தக் குழந்தைகள் இப்போது ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும் வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்த மகிழ்ச்சியைப் பற்றி பேசினார்.

பள்ளிகள், சாலைகள், வீட்டுவசதி மற்றும் தண்ணீர் கிடைப்பது குறித்துப் பேசியவர், சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்தப் பிரிவினரின் கண்ணியமான வாழ்க்கையின் அடிப்படை இவை என்று கூறினார்.

நாட்டில் ஏழைகளுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று  தெரிவித்தார். “எங்களைப் பொறுத்தவரை, ஏழைகளுக்கான வீடு என்பது வெறும் எண் மட்டுமல்ல, கண்ணியத்தை ஏற்படுத்துவதாகும்”, என்று கூறினார்.

இந்த வீடுகளின் வடிவமைப்பு குறித்த முடிவு பயனாளிகளிடமே விடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பெரும்பாலான வீடுகள் வீட்டின் மகளிர் பெயரில் உள்ளன என்ற உண்மையையும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

நீர்வள இயக்கத்தின் கீழ், 10 கோடி புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று  கூறினார். மாநிலத்தில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம் தேசிய அளவிலும் பயனுள்ளதாக உள்ளது என்று கூறினார். நீங்கள்தான் என்னுடைய ஆசிரியர் என்று தெரிவித்தார்.

“திறன்மேம்பாட்டுப்பள்ளித் திட்டம் மற்றும் வித்யா சமிக்சா 2.0 ஆகியவை பள்ளியில் கல்வியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்” என்று கூறினார். இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வித்யா சமிக்சா கேந்திரங்களை நிறுவுமாறு தலைவர் தன்னை வலியுறுத்தியதாகவும், இந்த உன்னத நோக்கத்திற்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற முயற்சிகள் திறமையான மாணவர்களுக்கும், வளங்கள் இல்லாதவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். “பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் அதே நேரத்தில் திறமையை ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துவதை பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு  முன்னர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி வசதிகள் இல்லாதது பெரும் எண்ணிக்கையிலான இடைநிற்றலுக்கு வழிவகுத்தது என்று சுட்டிக்காட்டினார்.

தாம் குஜராத் முதலமைச்சராக பதவியேற்றபோது மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளில் அறிவியல் பள்ளி இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். “அரசு இந்நிலைமையை முற்றிலுமாக மாற்றியுள்ளது” என்று கூறினார், கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் மற்றும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டன. பழங்குடிப் பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளாக அறிவியல், வணிகம் மற்றும் கலை நிறுவனங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பைக் கண்டுள்ளது.

பழங்குடிப் பகுதிகளில் 25,000 வகுப்பறைகள் மற்றும் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. கோவிந்த் குரு பல்கலைக்கழகம் மற்றும் பிர்சா முண்டா பல்கலைக்கழகத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார். இந்த பிராந்தியங்களில் பல திறன் மேம்பாட்டு நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்துப் பேசிய பிரதமர், தாய்மொழியில் கல்வி கற்பது பழங்குடி மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்கும் என்றார்.

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ஏகலவ்யா உறைவிடப் பள்ளிகள் பழங்குடிப் பகுதிகளில் வாழ்க்கையை மாற்றியமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எஸ்.சி., எஸ்.டி., கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு உதவுகிறது என்றும், நாட்டின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பில் பழங்குடி இளைஞர்களை ஊக்குவிப்பதே இந்த முயற்சி என்று பிரதமர் கூறினார். தொலைதூரப் பள்ளிகளில் அடல் ஆய்வகங்கள் பழங்குடி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதை குறிப்பிட்டார். கோடிக்கணக்கான முதல் முறை தொழில்முனைவோரை உருவாக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன்கள் குறித்தும் பேசினார்.

வந்தன் கேந்திராக்கள் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடி மக்களுக்கு பயனளிக்கின்றன. அவை பழங்குடிகளின் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான சிறப்பு விற்பனை நிலையங்கள்.

 

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் மற்றும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டவர்கள் இன்று அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் உதவியுடன் வளர்ச்சியின் உச்சிகளை எட்டியுள்ளனர் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடிகளின் பெருமைக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசியவர், பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த நாளைக் குறிப்பிட்டார். இது இப்போது பழங்குடியினர் கௌரவ தினமாகக்  கொண்டாடப்படுகிறது என்றும், பழங்குடி சமூகங்களுக்கான பட்ஜெட்டை கடந்த காலத்தை விட, தற்போதைய அரசு 5 மடங்கு அதிகரித்துள்ளது.

பழங்குடிகள் மற்றும் பெண்களின் உரிமைகள் ஏன் இவ்வளவு காலமாக மறுக்கப்படுகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார். “சோட்டா உதய்பூர் உட்பட முழு பழங்குடிப் பகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் உங்கள் இந்த மகன் உங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த வந்திருக்கிறார் என்று சொல்ல நான் வந்துள்ளேன்” என்று கூறினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அனைத்து பெண்களும் பங்கேற்பதற்கான வழிகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக் காட்டினார். எஸ்.சி மற்றும் எஸ்.டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பையும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் முதல் பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதை எடுத்துரைத்தார்.

அமிர்தகாலத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார், ஏனெனில் அதன் தொடக்கம் அற்புதமானது என்று கூறினார்.

 

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் மீது காங்கிரஸுக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

சனாதனம் உலகிற்கு இன்றியமையாதது: கவர்னர் ஆர்.என்.ரவி!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies