மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்கு, முரசொலி அறக்கட்டளை சார்பில் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என எல்.முருகன் பேசியதற்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு எதிரான எல்.முருகனின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க முரசொலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.