திமுக அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விஷ்வ இந்து பரிஷத் – வட தமிழகம் மற்றும் ஹிந்து அமைப்புகள் மற்றும் ஹிந்துமத தலைவர்கள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தண்டி சுவாமி ஜீதேந்திரானந்த சரஸ்வதி பொதுச் செயலாளர், அகில் பாரதிய சந்த் சமிதி, வெள்ளிமலை ஆசிரமத்தின் சுவாமி சைதன்யானந்தா சுவாமி மதுரானந்தா, அலோக் குமார், மூத்த வழக்கறிஞர், மத்திய செயல் தலைவர் வி.ஹெச்.பி. டாக்டர் சொக்கலிங்கம், தலைவர் விஷ்வ இந்து பரிஷத் – வட தமிழ்நாடு, சு. சீனிவாசன், மூத்த வழக்கறிஞர், மத்திய இணை கன்வீனர், வி.ஹெச்.பி. சட்டப்பிரிவு, தலைமையிலான விஷ்வ இந்து பரிஷத் குழு சார்பில் மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இன்று ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், சனாதன ஒழிப்பு மாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சு கவலை அளிக்கிறது. அவர் முதல்வரின் மகன் என்பதால், நிலைமையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
உதயநிதியின் பேச்சு, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. சமூகத்தில் வெறுப்புணர்வைப் பரப்பியுள்ளது. இந்த கருத்துகள் அனைத்தும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால்கட்டவிழ்த்து விட்டப்பட்டுள்ளது.
மேலும், சனாதனத்தை ஒழிக்கும் மாநாட்டில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டது வேதனை அளிக்கிறது. சட்டத்தை மீறிய செயல். இதன் மூலம் அரசியல் சட்டத்தை இவர்கள் உடைத்துள்ளனர். எனவே,சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இரண்டு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.