வரும் செப்டம்பர் 30-ம் தேதி முக்கிய நாள் மக்களே. மறந்துவிடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். காரணம், புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.
மேலும், மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நாமினி ஒருவரின் பெயரை குறிப்பிட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர் கணக்கு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை குறிப்பிட வேண்டும்.
அத்துடன், வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய ஆர்.டி. மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள், தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, வரும் 30-ம் தேதிக்குள் பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், பணப்பரிவர்த்தனை சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்.