இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.
இதில் முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 276 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இரண்டாம் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பித்திருந்த சத்தலாக விளையாடி வந்தனர். இதில் இந்திய அணியின் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் அடிக்க கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அரைசதம் அடித்தனர் இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்துள்ளது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 217 ரன்களில் ஆட்டம் இழந்தது.
நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது . முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 286 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
மேலும் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணித் தொடரைக் கைப்பற்றிக் கோப்பையை வென்றது. தொடரின் நாயகன் விருது இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.