இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சந்திரனில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்து அங்கிருந்து தரவுகளை பெற்றது. உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் செய்ய முடியாத சாதனையை இஸ்ரோ இந்த விஷயத்தில் சாதித்து கட்டியது.
சந்திரயான் திட்டம் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே இஸ்ரோ அடுத்த ஆய்வுக்காக தயாராகி கடந்த 2ம் தேதி ஆதித்யா எல்1 என்ற விண்களத்தை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு அனுப்பியது.
இந்நிலையில் இஸ்ரோ சேர்மன் சோமநாத் சமீபத்தில் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியா அடுத்து வெள்ளி கோளை ஆய்வு செய்ய தயாராகி வருவதாகவும் வெள்ளி கோளுக்கு ராக்கெட் அனுப்ப பேலோடுகள் தயாராகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: ” இஸ்ரோவிடம் பல கான்செப்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று வெள்ளி கோளுக்கு ராக்கெட் அனுப்பி ஆய்வு செய்யும் திட்டம். தற்போது இந்த ஆய்வுக்காக பேலோடுகள் எல்லாம் தயாராகிவிட்டது. வெள்ளி கோள் என்பது ஆய்வு செய்வதற்கான பல சுவாரசியங்கள் நிறைந்த கோளாக இருக்கிறது.
வெள்ளி கோளில் அட்மாஸ்பியர் உள்ளது. இந்த அட்மாஸ்பியர் அதிக திடமானதாக இருக்கிறது. பூமியை விட 100 மடங்கு அதிக அழுத்தம் கொண்ட அட்மாஸ்பியர் வெள்ளிக்கோளில் உள்ளது. பூமியிலிருந்து பார்க்கும்போது வெள்ளி கோளின் மேல் பரப்பு கடினமானதாக இருக்கிறதா அல்லது திரவ வடிவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதை அங்கு சென்று ஆய்வு செய்தால் தான் நம்மால் கணித்து சொல்ல முடியும்.
வெள்ளிக்கோளை ஆய்வு செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த பூமி என்று வேண்டுமானாலும் வெள்ளி கோளாக மாற வாய்ப்புள்ளது. இன்று இல்லை என்றாலும் ஒரு 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமி தனது தன்மையை மாற்றி வெள்ளிக் கோள் போல உருவாக வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர், “தற்போது பூமி எப்படி இருக்கிறதோ இப்படியாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. பூமி தன்னைத்தானே மாற்றிக் கொண்டே வருகிறது இப்படியாக அது வெள்ளி கோள் போல மாறினால் என்ன நடக்கும் என்பதை நாம் இப்பொழுது ஆய்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பூமி சூரியனிலிருந்து இரண்டாவது கோளாக இருக்கிறது. அது மட்டுமல்ல பூமியின் பக்கத்து கோளாக இருப்பதால் இதைப் பற்றி ஆய்வு செய்து நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. வெள்ளி கோளட பூமியின் டிவின் என கூறலாம். அந்த அளவிற்கு பூமிக்கும் வெள்ளிக் கோளுக்கும் அதிகமான ஒற்றுமைகள் உள்ளன.” என்று கூறினார்.