திமுக ஆட்சிக்கு வந்து 29 மாதங்களில் எத்தனை குடியிருப்புகளுக்கு மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள்? எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊட்டி ”என் மண் என் மக்கள்” பயணம், கடுமையான குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீது கொண்டுள்ள பேரன்பும், பாஜக மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவும், பெருந்திரளெனக் கூடி மக்கள் ஒரு புரட்சி செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் இருந்து, ஊட்டி நோக்கி மக்கள் பயணம் வருகிறார்கள். ஆனால், ஊட்டி மக்களுடைய பிரச்சனைகளைக் காலம் காலமாக இருக்க கூடிய அரசியல் கட்சிகள் தீர்க்கத் தவறி விட்டனர்.
ஆளுங்கட்சி சம்பாதிப்பதற்காக மட்டுமே திட்டங்கள் போடுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு சரியான வாகன நிறுத்த வசதிகள் செய்யவில்லை. ஊட்டி நகராட்சியில் சொத்து வரி கட்டணம் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
நீலகிரி எம்பி ஆ.ராஜா, நீலகிரியின் பிரச்சனைகளைப் பேசமாட்டார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசமாட்டார். படுகா மக்கள் பிரச்சனைகளைப் பேசமாட்டார். மனித விலங்கு மோதல் குறித்துப் பேச மாட்டார். மின்சாரம் இல்லமா பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அதைப்… pic.twitter.com/FMGuSLIcnZ
— K.Annamalai (@annamalai_k) September 28, 2023
திராவிட முன்னேற்ற கழகம் பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஊட்டி படுகா சமுதாயத்தினருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண் 280ல் திமுக கூறியது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தப் பகுதி திமுக அமைச்சர் ராமச்சந்திரன், படுகா சமூக மக்கள் வசதியாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து பெறத் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், படுகா சமூக மக்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவார் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301ல், தமிழக மாநகராட்சி நகராட்சியில் வசூலிக்கப்படும் வாடகையையும் சொத்து வரியையும் குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஊட்டி சந்தையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கடைக்கு வாடகை ₹13,500 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
இங்கு இருக்கும் சிறு வியாபாரிகளை காலி செய்யச் சொல்கிறார்கள். 100 ஆண்டு காலமாக ஐந்து தலைமுறையாக இருக்கக்கூடிய மக்களை, வெறும் 100 மணி நேரத்தில் காலி செய்யச் சொல்கிறார்கள். சர்வாதிகாரத்தனமாக மக்களை வெளியேற்ற முயற்சி செய்தால், பாஜக தலைவர்களும் தொண்டர்களும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவார்கள்.
கடந்த டிசம்பர் 2021ல், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதியில் விவசாய நிலத்தை திமுக அரசு சிப்காட் தொழிற்பேட்டை என்ற பெயரில் எடுக்க முயற்சித்த பொழுது, பாஜக ஆர்ப்பாட்டம் செய்து அந்த அரசாணையை ரத்து செய்ய வைத்தது.
கடந்த நவம்பர் 2022ல், கூடலூரில் உள்ள TANTEA நிறுவனத்தை மூடு விழா நடத்துவதற்கு திமுக தயாராகி அதற்கான அரசாணை வெளியிட்டது. பாஜக போராட்டம் நடத்தி, மறுபடியும் அந்த அரசாணையை ரத்து செய்தது. மக்களுக்காகப் போராட்டம் நடத்துவது பாஜகவுக்குப் புதிதல்ல.
இங்குள்ள வியாபாரிகளுக்கு, பாஜக உறுதுணையாக இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு கிடையாது. திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது இங்குள்ள மின்சார வசதியற்ற 10,000 வீடுகளுக்கு மின்சார வசதி கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 29 மாதங்களில் எத்தனை குடியிருப்புகளுக்கு மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள்?
தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றிய முழு பெருமையும் திமுகவுக்குத்தான். டிஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், டிஆர்பி ராஜா போன்ற திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் சம்பாதிக்கத்தான் டாஸ்மாக் நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் 18 வயதில் இருந்து 60 வயதுக்குள் இருக்க கூடிய ஆண்கள் 19% பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. சம்பாதிப்பதில் 80 சதவீத பணத்தை டாஸ்மாக்குக்குச் செலவிடுகிறார்கள். டாஸ்மாக் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
நீலகிரி எம்பி ஆ.ராஜா, நீலகிரியின் பிரச்சனைகளைப் பேசமாட்டார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசமாட்டார். படுகா மக்கள் பிரச்சனைகளைப் பேசமாட்டார். மனித விலங்கு மோதல் குறித்துப் பேச மாட்டார்.
மின்சாரம் இல்லமா பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அதைப் பத்தி பேசமாட்டார். ஆனால் பேசுவது அனைத்துமே, சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக மட்டுமே.
ஒரு பகுதி நேர பாராளுமன்ற உறுப்பினராக, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீலகிரிக்கு சுற்றுலா பயணியாக வருகிறார். சனாதனம் என்பது தொழுநோய், இந்துக்கள் என்று சொன்னாலே விபச்சாரியின் மகன் இவைதான் ஆ.ராஜா உதிர்த்த முத்துக்கள்.
2011 ஆம் ஆண்டு மே மாசம் உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை, உலக அளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் வரிசையை வெளியிட்டார்கள். 10 பேர் வரிசையில் இரண்டாவது இடம், 2G ஊழல் ராஜாதான்.
ஒரு முறை அமைச்சரானதுக்கே, 2G ஊழல் செய்து 15 மாதம் திகார் சிறையில் இருந்தார். 1,76,000 கோடி ரூபாய் ஊழல். ஏழை எளிய மக்களுக்கான வளர்ச்சிப் பணம். அந்தப் பணம் இருந்தால் தமிழகத்தில் வறுமையை ஒழித்திருக்கலாம். வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் ராஜாவை, நீலகிரி மக்கள் டெபாசிட் இழக்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழகத்திற்குப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் நீலகிரி மருத்துவக் கல்லூரியும் ஒன்று. நீலகிரியில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு திட்டத்தின் கீழ் 11,232 குடும்பங்களுக்கு வீடு, 78260 வீடுகளுக்கு குடிநீர் வசதி, 40,238 வீடுகளுக்கு முதன்முதலாக கழிப்பறை வசதி, 17,432 குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு, பிரதம மந்திரியினுடைய மருத்துவ காப்பீடு திட்டம் ₹5,00,000 மருத்துவ காப்பீடு திட்டம், நீலகிரி மாவட்டத்தில், 66,656 பேர்.
நீலகிரி மாவட்டத்தில் 48163 சிறு குறு விவசாய பெருமக்களுக்கு, 14 முறை 2000 ரூபாய் கொடுக்கப்பட்டது. சாலையோர வியாபாரிகளுக்கு சுவநிதி திட்டத்தின் மூலம் வட்டி இல்லாமல் கடன் கொடுக்க ₹10,000. முத்ரா திட்டத்தில் 2,00,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கடனாக வந்திருக்கிறது.
1568 கோடி ரூபாய் நீலகிரிக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. G 20 மாநாட்டுக்கு வந்த உலகத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுப் பெட்டியில் ஊட்டி தேயிலை இடம்பெற்றிருந்தது. உலக அளவில் ஊட்டியின் பெருமையைக் கொண்டு சென்றிருக்கிறார் நமது பிரதமர்.
யுனெஸ்கோ புகழ்பெற்ற ஊட்டி மலை ரயில், 80 கோடி செலவில், ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரயிலாக மாற்றப்படவிருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு விஷயம் ஆகும். தேயிலைத் தோட்ட பிரச்சனைகள் தொடர்பாக, இங்குள்ள விவசாயச் சங்கத் தலைவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்திக்க வைத்திருக்கிறோம். பாஜக, தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
நீலகிரியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நமக்கென்று நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் வரும்பொழுது இந்த வளர்ச்சி என்பது இன்னும் வேகப்படுத்தப்படும்.
வளர்ச்சித் திட்டங்கள் இரண்டு மடங்கு மூன்று மடங்காக செய்ய முடியும். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். திராவிட முன்னேற்ற கழகம் எனும் தீய சக்தியை முழுமையாக தமிழகத்தில் இருந்து அடியோடு வேரோடு மண்ணோடு சாய்க்க வேண்டிய நேரம் இது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறை 400 எம்பிக்களுடன் ஆட்சி அமைக்கும்போது, தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் அனுப்பி வைப்போம் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. அதுவரை அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டுமென்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன், என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.