2023 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெறயுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பயிற்சிப் போட்டிகளில் உலகக்கோப்பைப் போட்டியில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பை லீக் சுற்றில் தங்கள் குரூப்பில் இடம் பெறாத மற்ற இரண்டு அணிகளுடன் மோதும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று பயிற்சிப் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி போட்டிகள் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது. இந்தப் போட்டிகள் மதியம் 2 மணிக்கு நடைபெறும்.
செப்டம்பர் 29, 2023 – வெள்ளிக்கிழமை
வங்கதேசம் – இலங்கை
தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான்
நியூசிலாந்து – பாகிஸ்தான்
செப்டம்பர் 30, 2023 – சனிக்கிழமை
இந்தியா – இங்கிலாந்து
ஆஸ்திரேலியா – நெதர்லாந்து
அக்டோபர் 2, 2023 – திங்கட்கிழமை
இங்கிலாந்து – பங்களாதேஷ்
நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா
அக்டோபர் 3, 2023 – செவ்வாய்க்கிழமை
ஆப்கானிஸ்தான் – இலங்கை
இந்தியா – நெதர்லாந்து
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா