பீகார் மாநிலத்திற்கு தமது முதல் பயணத்தை குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை மேற்கொள்கிறார்.
டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கருடன், நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் குடியரசு துணைத்தலைவர், அங்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.
ஒரு நாள் சுற்றுப்பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர், கயாவிற்கும் செல்லவிருக்கிறார்.