வாக்காளர் பட்டியலில் திருத்தம்: நவம்பர் மாதம் சிறப்பு முகாம்!
Oct 4, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: நவம்பர் மாதம் சிறப்பு முகாம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்டோபர் மாதம் 27-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையம் 2023 மே 29-ம் தேதியன்று, 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பிக்க அக்டோபர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக நவம்பர் 4, 5, 18 மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன. ஆகவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலங்களிலும் மற்றும் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இது தவிர, www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், 1.1.2024, 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அதேபோல வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ-ஐ நேரில் அளிக்க வேண்டும் அல்லது அதிகாரிக்கு தபாலில் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-ல் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபனைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கு படிவம் 7-ல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றுதல், நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், மாற்றுத்திறனாளிகளை குறிப்பது, மாற்று புகைப்பட அடையாள அட்டை பெறுவது ஆகியவற்று படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம்.

இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான தீர்வு, டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்படும். தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியலை 2024 ஜனவரி 5-ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது” என்று  தெரிவித்திருக்கிறார்.

Tags: Election commissionervoter listSpecial Camp
ShareTweetSendShare
Previous Post

மறைந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்

Next Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies