மறைந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்
Sep 13, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக, சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98.

மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட எம்.எஸ். சுவாமிநாதன், கடந்த 1925 -ம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார்.

தனது சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயின்ற அவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாட்டில், அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண் அறிவியல் முறைகளைக் கண்டறிந்தார்.

இந்தியாவின் பசுமைப்புரட்சியை முன்னின்று நடத்திய எம்.எஸ். சுவாமிநாதன், சர்வதேச அளவில் புகழ் பெற்றார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972 -ம் ஆண்டு முதல் 1979 -ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) டைரக்டர் ஜெனரலாகவும், க்வாஷ் மாநாடுகள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) தலைவராகவும் பதவி வகித்தார். ஆசியாவின் நோபல் விருது எனப் போற்றப்படும் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

1999 -ல் வெளியான டைம்ஸ் இதழின் சிறந்த 20 ஆசிரியர்கள் எனும் கவுரவத்திற்குத் தேர்வான 3 ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

எம்.எஸ். சுவாமிநாதன், மீனா என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு, குழந்தை மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன் , பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு நிபுணர் நித்யா சுவாமிநாதன் என 3 மகள்கள் உள்ளனர்.

தனது குடும்பத்திற்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை, வினோபாபா பூமி தான இயக்கத்திற்கு நன்கொடையாக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: green revolution fatherms swaminadhanagri scientist
Share
Tweet
SendShare
Previous Post

மந்திராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

Next Post

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: நவம்பர் மாதம் சிறப்பு முகாம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies