உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் விபத்தில், ஓட்டுனர் செல் ஃபோனைப் பார்த்து கெண்டு இரயிலை இயக்கியது காணொலியில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி மின்சார இரயில் தடம் புரண்டு, நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து இரயில்வே ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Mathura Train accident caught on camera pic.twitter.com/gLyvZMlRyT
— Harsh Tyagii (@tyagiih5) September 28, 2023
இதுகுறித்து இரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரயிலைக் கையாளும் போது சச்சின் என்ற ஊழியர் குடித்துவிட்டு, தனது செல் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. க்ரூ வாய்ஸ் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் சிஸ்டம் (சிவிவிஆர்எஸ்) படி, இரயில் நடைமேடைக்கு வந்த பிறகு, சச்சின் இன்ஜினுல் நுழையும் போதே செல்பேசியை கையில் வைத்தவாறு, கவனக்குறைவாக தனது பையை என்ஜின் த்ரோட்டில் மீது வைத்துவிட்டு மீண்டும் தனது செல்பேசியில் கவனம் செலுத்தினார். சிறுது நேரத்தில் இரயில் நடைமேடையை நோக்கி நகர்வதைக் காணலாம்.
த்ரோட்டில் பையின் அழுத்தத்தைக் கையாள முடியாமல் இரயில் முன்னோக்கிச் சென்று, பிளாட்பாரத்தின் முட்டுக்கட்டையை உடைத்து ஏறிநின்றது தெரிய வந்துள்ளது.
பின்னர் சச்சினுக்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் நடத்தப்பட்டது, அதில் 47 மி.கி/100 மி.லி அளவு இருந்தது, அவர் லேசாக குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரணையில், இரவு 10:49 மணிக்கு மதுரா ஸ்டேஷனுக்கு இரயில் வந்த பிறகு, லோகோ பைலட் தனது பணியிலிருந்து வெளியேறினார், அதைத் தொடர்ந்து சாவியை எடுக்க சச்சின் வண்டியில் நுழைந்தார். அவர் வண்டிக்குள் நுழைந்த சில நொடிகளில், ரயில் நகரத் தொடங்கியது, முட்டுக்கட்டையை உடைத்து, அதன் பாதி பகுதி நடைமேடையில் ஏறியது தெரிய வந்துள்ளது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை இரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.