ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மரப்படகு பிரிவில் இந்திய மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது.
இதில் நேற்று ILCA7 பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் சார்பாக தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் பங்குபெற்றார். இதில் நடைபெற்ற 11 போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று 34 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.
கொரியா நாட்டின் ஜீமின் ஹாவு 42 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றார். போட்டியின் போது சரவணாவுக்கும் ஜீமின் ஹாவுக்கும் கடுமையான போட்டி நடைபெற்றது இறுதியில் ஜீமின் ஹாவு 2 ஆம் இடம் பிடித்தார். இந்த போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்றது.
இதற்கு முன்பு ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா வெள்ளியும், ஆண்களுக்கான விண்ட்சர் பர் எனப்படும் பாய்மரப்படகுப் போட்டியிலும் வெண்கலமும் வென்றது. பாய்மரப்படகுப் போட்டியில் இது இந்தியாவின் 3 வது பதக்கமாகும்.