சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து நேர்த்திக்கடன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 07:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில், முதலில் கேரளாவில் உள்ள பௌர்ணமி காவு பத்ரகாளி கோவிலுக்குச் சென்றார். தொடர்ந்து, ஆந்திர மாநிலம் சுல்லூர்பேட்டா நகரில் உள்ள செங்களாம்மா கோவிலுக்குச் சென்றார்.

கோவில் பயணம் குறித்து சோம்நாத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அறிவியலும் ஆன்மிகமும் இரண்டு வெவ்வேறு பகுதிகள். இரண்டையும் கலக்க வேண்டியதில்லை. நான் சந்திரனையும் ஆராய்கிறேன், ஆன்மாவையும் ஆராய்கிறேன். விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகத்தை ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இது. இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தைத் தேடுவதற்காக பல கோவில்களுக்குச் செல்கிறேன்.

நான் பல கோவில்களுக்கு வருகிறேன். வேதங்களைப் படித்து, இந்த பிரபஞ்சத்தில் கலையின் அர்த்தத்தையும், நமது பயணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இது அகத்தையும் புறத்தையும் ஆராய்வதற்காக நாம் உருவாக்கிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. நான் அறிவியலையும் செய்கிறேன். மன திருப்திக்காக கோவில்களுக்கும் வருகிறேன்” என்று கூறினார்.

இதற்கிடையே, அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) 50-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் நேற்று உரையாற்றினார். அப்போது, “நாம் நமது அமிர்தகாலை அடையும்போது, ​​விண்வெளியில் நமது பொருளாதாரத்தின் பங்கு கணிசமானதாக இருக்கும். அது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளில் வெளிவரும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதன் மூலம் அல்ல, இந்தியாவில் பயன்பாடுகள், சேவைகள் மற்றும் உற்பத்தியை உருவாக்குவதன் மூலம்” என்றார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். இதுகுறித்து சோம்நாத் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்குவது எங்கள் முயற்சி என்றால், அது வெற்றிகரமாகத் தரையிறங்கியது எங்களது நல்ல அதிர்ஷ்டம். சோமநாதரின் ஆசீர்வாதத்தால் நாங்கள் பணியை நிறைவேற்ற முடிந்தது. இன்னும் மற்ற திட்டங்களிலும் நாங்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு, எங்களுக்குத் தேவை வலிமையும் ஆசீர்வாதமும்” என்று கூறினார்.

Tags: ISROChairmanSomnathGujratSomnath Temple
Share
Tweet
SendShare
Previous Post

பாய்மரப்படகுப் போட்டி : தமிழக வீரருக்கு பதக்கம்.

Next Post

திருவள்ளுவர் மண்ணில் தாமரை வெற்றிபெறும்: சி.டி.ரவி!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies