2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் காயமடைந்த அக்சர் படேல் உடல் தகுதியை எட்டாததால் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
🚨 BREAKING: India make late change to #CWC23 squad with all-rounder set to miss out due to injury!
Details 👇https://t.co/ca5uaYH0ge
— ICC Cricket World Cup (@cricketworldcup) September 28, 2023
2023 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றிருந்த அக்சர் படேலுக்கு ஆசியக் கோப்பைத் தொடரின் போது காயம் ஏற்பட்டது.
அதே போல் இந்திய, ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் அக்சர் பட்டேலால் இடம்பெற முடியவில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார். மேலும் உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் அஸ்வின் அணியில் இடம் பெற்றார்.
அந்தத் தொடரில் அஸ்வின் சிறப்பாக விளையாடியதால் அக்சர் படேலுக்கு பதில் உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவார் என்னும் வதந்தி பரவிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்குபெறும் போட்டியார்களை மற்றும் நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் இன்று அக்சர் படேலுக்கு பதில் அஸ்வின் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர் அஸ்வின்.