அக்டோபர் 1, 2023 அன்று ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
1st October at 10 AM, we come together for a pivotal cleanliness initiative.
A Swachh Bharat is a shared responsibility, and every effort counts. Join this noble endeavour to usher in a cleaner future. https://t.co/tFvvDwKnzq
— Narendra Modi (@narendramodi) September 29, 2023
நகர்பகுதி தூய்மை என்ற தலைப்பில் எக்ஸ் சமூக ஊடக தளத்தை பகிர்ந்து பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக நாங்கள் ஒன்று கூடுகிறோம்.
தூய்மை இந்தியா என்பது பகிர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பாகும், மேலும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்.” என்று கூறியுள்ளார்.