கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளை, துள்ளிய தாக்குதல் என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, அழித்து ஒழித்த இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பினர். பாரத பிரதமர் மோடி கொடுத்த உத்வேகமே இந்த வெற்றிக்குச் காரணம் என வீரர்கள் வெற்றி முழக்கமிட்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று, இந்தியாவின் எல்லைப் பகுதியான உரியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தி, 19 ராணுவ வீரர்களைக் கொன்றனர். 30 வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் திட்டத்தை இந்திய ராணும் ரகசியமாக மேற்கொண்டது. இதனையடுத்து, செப்டம்பர் 29-ம் தேதி துள்ளிய தாக்குதல் என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் துவங்கியது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்த 4 தீவிரவாத முகாம்களை நோக்கி 3 கிலோ மீட்டர் பதுங்கியும், நடந்தும் சென்று அழித்துஒழித்தனர். ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பும் போது, அதில் ஒருவர் மட்டுமே கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டார். மற்றவர்கள் அனைவரும் வெற்றிகரமாகத் திரும்பி வந்தனர். இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் மோடி தான் காரணம், அவர் கொடுத்த உத்வேகமே வெற்றிக்கு காரணம் என ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தனர். ஆனால், இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கீழ்தரமான விமர்சனம் செய்தார். ஆனால், இந்திய ராணும் மிக சிறந்த ராணுவம் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் காங்கிரஸார் திட்டமிட்டு, பாரத பிரதமர் மீதும், இந்திய ராணுவம் மீதும் அவதூறு பரப்புவதை மக்கள் கண்டித்தனர். எனவே, காங்கிரஸ் கட்சியினரைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், பிரதமர் மோடியின் பின்னால் அனைவரும் அணிவகுத்தால், வரும் 2026-ல் இந்தியா உலகின் மிகப் பெரிய வல்லரசாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாரதத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்.