19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீ ரைபிள் 3 பி போட்டியில் இந்தியா அணி 1769 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றது இது மட்டுமின்றி அமெரிக்காவின் முந்தைய உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
A stupendous win, prestigious Gold and a world record! Congratulations to @KusaleSwapnil, Aishwary Pratap Singh Tomar and Akhil Sheoran for emerging victorious in the Men's 50m Rifle 3Ps team event at the Asian Games. They have shown exceptional determination and teamwork. pic.twitter.com/xhuMQUHKZ3
— Narendra Modi (@narendramodi) September 29, 2023
இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவிற்கு ஒரு அற்புதமான வெற்றியை கொடுத்த ஸ்வப்னில் குசல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் ஆண்களுக்கான 50 மீ ரைபிள் 3 பி தங்கம் வென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் தங்களது குழுப்பணியை உறுதியுடன் சிறப்பாக செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்று பாராட்டியுள்ளார்.
What a Golden performance!
Kudos to Aishwary Pratap Singh Tomar, @KusaleSwapnil, and Akhil Sheoran our 50m Rifle 3 Positions Men's Team, for clinching the coveted gold at the #AsianGames. You all will certainly go a long way in making our nation proud. pic.twitter.com/OlqLqk7f0D
— Amit Shah (@AmitShah) September 29, 2023
மேலும் 10 மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற பாலக் குலியாவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். இது குறித்து அவர், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மற்றொரு சிறப்பு தருணம் இது. 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் போட்டியில் பாலக்கின் சிறப்பான செயல் திறனுக்காகவும், தங்கம் வெண்றதுக்காகவும் வாழ்த்துக்கள். அவரது துல்லியமும் கவனமும் நம் தேசத்திற்கு மகத்தான கொண்டு வந்துள்ளது. அவரது முன்னோக்கி முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள், என்று பதிவிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெற்றி பெற்ற வீர்கள் அனைவருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்.