யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை எச்சரித்துள்ளது.
அண்மையைில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம், இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டினார்.
இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மகராஷ்டிரா முதல் மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தனது எக்ஸ் பதிவில் காணொலி மூலம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு,
இது போன்று ஊழல் நடைபெற்றுள்ளதாக விஷால் தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஊழல்களில் மத்திய அரசு சகிப்பு தன்மையற்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது (ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்). யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பை செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்று மத்திய தணிக்கைத்துறையால் அச்சுறுத்தல் அல்லது மிரட்டலுக்கு யாராவது ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.