அக்டோபர் 1-ம் தேதி தெலங்கானா செல்கிறார் பிரதமர் மோடி!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 1-ம் தேதி தெலங்கானா செல்கிறார் பிரதமர் மோடி!

ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 06:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமர்  நரேந்திர மோடி 2023 அக்டோபர் 1 ஆம் தேதி தெலங்கானாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2.15 மணியளவில், மகபூப்நகர் மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கு சாலை, இரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் இரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நாக்பூர் – விஜயவாடா பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான முக்கிய சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சுமார் ரூ.6400 கோடி செலவில் இந்த சாலை திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டங்கள் வாரங்கல் மற்றும் கம்மம் இடையிலான பயண தூரத்தை சுமார் 14 கி.மீ குறைக்கும்; கம்மம் மற்றும் விஜயவாடா இடையே சுமார் 27 கி.மீ குறையும் .

தேசிய நெடுஞ்சாலை 365 பிபியின் 59 கி.மீ நீளமுள்ள சூர்யபேட்டை முதல் கம்மம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.  சுமார் 2,460 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஹைதராபாத் – விசாகப்பட்டினம் வழித்தடத்தின்  ஒரு பகுதியாகும். இது கம்மம் மாவட்டம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில்,  ’37 கி.மீ. நீளமுள்ள ஜக்லெய்ர் – கிருஷ்ணா புதிய ரயில் பாதையை’ பிரதமர் மோடி அர்ப்பணிப்பார். ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த புதிய இரயில் பாதை பிரிவு பின்தங்கிய மாவட்டமான நாராயண்பேட்டையின் பகுதிகளை முதல் முறையாக இரயில்வே வரைபடத்தில் கொண்டு வருகிறது.

கிருஷ்ணா ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) – ராய்ச்சூர் – ஹைதராபாத் (கச்சிகுடா) ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தெலங்கானாவின் ஹைதராபாத், ரங்காரெட்டி, மகபூப்நகர், நாராயண்பேட் ஆகிய மாவட்டங்களை கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் இந்த இரயில் சேவை இருக்கும். இந்த சேவை பின்தங்கிய மாவட்டங்களான மகபூப்நகர் மற்றும் நாராயண்பேட்டையில் உள்ள பல புதிய பகுதிகளுக்கு முதல் முறையாக இரயில் இணைப்பை வழங்கும், இது மாணவர்கள், தினசரி பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள உள்ளூர் கைத்தறி தொழில்துறையினருக்கு பயனளிக்கும்.

‘ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி பைப்லைன் திட்டத்தை’ பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் ரூ.2170 கோடி செலவில் கட்டப்பட்ட எல்பிஜி குழாய் திட்டம், கர்நாடகாவின் ஹாசனில் இருந்து செர்லபள்ளி (ஹைதராபாத்தின் புறநகர்) வரை, இப்பகுதியில் எல்பிஜி போக்குவரத்து மற்றும் விநியோகத்தின் பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையை வழங்குகிறது. கிருஷ்ணப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் (மல்காபூர்) வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) மல்டி-ப்ராடக்ட் பெட்ரோலியம் பைப்லைனுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.1940 கோடி செலவில் 425 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கப்படும். இந்த பைப்லைன் பிராந்தியத்தில் பாதுகாப்பான, வேகமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பெட்ரோலிய பொருட்களை வழங்கும்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை; மேலாண்மை ஆய்வுகள் துறை; விரிவுரை அரங்க வளாகம் – III;  மற்றும் சரோஜினி நாயுடு கலை மற்றும் தொடர்பியல் துறை (இணைப்பு)  ஆகியவை இதில் அடங்கும். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேம்பட்ட  வசதிகளை வழங்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: PM Moditelungana
Share
Tweet
SendShare
Previous Post

விஷால் புகார்- மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை நடவடிக்கை.

Next Post

தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு போராட்டம்- விவசாயிகள் கவலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies