தமிழகத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான திருக்கோவில்கள் உள்ளன. இதில், பெரும்பாலான திருக்கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவையாகும். ஒரு சில திருக்கோவில்கள் மடங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த திருக்கோவில் எல்லாம் செங்கல், மண், மரம், சுதை உள்ளிட்டவையால் கட்டப்பட்டுள்ளது. அதுவும், சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். மேலும், பல்லவர்கள், சாளுக்கியர்கள் காலத்திலும் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடவறைக் கோவில்கள் எல்லாம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. சமணர்கள் கல் படுக்கைகளை உருவாக்கினர். இப்படி, திருக்கோவில்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில், மிகவும் பழமையான திருக்கோவில்களை ஆய்வு செய்ய மத்திய தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, தொல்லியல்துறை தென் மாநில ஆலய ஆய்வு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக திருக்கோவில் விவகாரத்தில், தொல்லியல்துறை மிக முக்கிய முடிவுக்கு வந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.