கோசலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக இஸ்கான் அமைப்பு விற்கிறது என பா.ஜ.க எம்.பி., மேனகா காந்தி குற்றம்சாட்டி இருந்த நிலையில், அவரிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அந்த அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக கோல்கட்டா இஸ்கான் அமைப்பின் துணைத்தலைவர் இராதாராமன் தாஸ் கூறியதாவது, ” மேனகா காந்திக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் , எங்களுக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்” என்று கூறினார்.
மேலும் அவர், ” மேனகா காந்தியின் அவதூறு பேச்சால் உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் பக்தர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்” என்றும் கூறினார்.
முன்னதாக மேனகா காந்தியின் குற்றச்சாட்டிற்கு, இஸ்கான் மறுப்பு தெரிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.