இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் உறுதி!
Sep 12, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக இருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜர் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்துவாரவுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு பின்னணியில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ‘நம்பகமான குற்றச்சாட்டுகள்’ இருந்தபோதிலும், அந்நாட்டுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க கனடா உறுதிபூண்டிருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாக தி நேஷனல் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. மாண்ட்ரியலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ, “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடு.

மேலும், கடந்தாண்டு இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். அதேநேரம், வெளிப்படையாக சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடாக, இந்த விஷயத்தின் (ஹர்தீப் சிங் நிஜர் கொலை) முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா, கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து பகிரங்கமாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது எழுப்புவார் என்று அமெரிக்காவிடமிருந்து தனக்கு உத்தரவாதம் கிடைத்திருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூயிருந்தார். ஆனால், இச்சந்திப்பின்போது, இந்தியா-கனடா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaCanadaPM Justin trudeau
Share
Tweet
SendShare
Previous Post

சாலையில் சுற்றித்திரியும் வெறி கொண்ட மாடுகளும், சென்னை மாநகராட்சியும்…!

Next Post

மேனகா காந்தியிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு – இஸ்கான் நோட்டீஸ்.

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies