அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் வழங்குவதைத் தடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை வழங்கியதை, தமிழக பாஜக பல முறை கண்டித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை வழங்கியதை, @BJP4Tamilnadu பல முறை கண்டித்துள்ளது. எனினும், மாணவர்களுக்குத் தரமான முட்டைகள் வழங்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், அதைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல்…
— K.Annamalai (@annamalai_k) September 29, 2023
எனினும், மாணவர்களுக்குத் தரமான முட்டைகள் வழங்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், அதைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார் அமைச்சர் கீதாஜீவன். தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில், தனியார் உணவகத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய, அரசின் சீல் வைக்கப்பட்ட முட்டைகள் இருந்த செய்தி வெளிவந்துள்ளது.
தரமான முட்டைகளை தனியார் உணவகங்களுக்கு விற்று விட்டு, குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அழுகிய முட்டைகள் வழங்குவதைச் சற்றும் ஏற்க இயலாது. உடனடியாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் தூக்கத்தில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் விழித்துக்கொண்டு, தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.