ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது. அதிலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என இரு பாலினத்தினரும் பங்குபெற முடியும். ஐந்தில் இந்தியா அணி சார்பாக சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா பங்குபெற்றன.
இதில் இருவரும் இணைந்து 14 புள்ளிகளை எடுத்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றனர். மேலும் இந்தியா அணி கடுமையாக போராடி 2 புள்ளிகளில் தங்க பதக்கத்தை தவறவிட்டுள்ளது. சீனா 16 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றுள்ளது.
இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.