சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வரும் 3 -ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்த வழக்குகளை, இனி வரும் காலத்தில், நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்து, கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பார்த்தால், நீதிமன்றங்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.