2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எந்த அணி வெற்றிப்பெறும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பற்றி பலரும் பல்வேறு வகையில் கூறிவருகின்றனர். மேலும் சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்றும் கூறப்படுகிறது. ஆசிய கண்டத்தில் நடைபெறுவதால் ஆசிய அணிகளுக்கு தான் முன்னுரிமை இருக்கும் என்றும் பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் சுனில் கவாஸ்கர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இம்முறை உலக கோப்பையை மீண்டும் இங்கிலாந்து அணி தான் வெல்லும். இங்கிலாந்து அணியில் இருக்கும் திறமையான வீரர்களை பாருங்கள். டாப் வரிசை,நடு வரிசை, கீழ் வரிசை என அனைத்திலுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தான் இருக்கிறார்கள்.
அவர்களுடைய ஆல் ரவுண்டர்களை பாருங்கள். அவர்கள் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலுமே ஆட்டத்தை தனி நபராக மாற்றக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இதேப் போன்று அவர்களிடையே நல்ல பந்துவீச்சு படையும் இருக்கிறது. மேலும் சுழற் பந்து வீச்சிலும் கைதேர்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். தற்சமயம் வரை இங்கிலாந்து அணிக்கு தான் உலக கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே இர்பான் பதான் இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என உறுதிப்பட கூடியிருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இந்திய அணி வீரர்கள் தற்போது நல்ல முறையில் செயல்படுவதால் நிச்சயம் நமக்கு தான் வாய்ப்பு என்றும் இர்பான் பதான் கூறி இருக்கிறார்.
ஆசிய கோப்பை ஆஸ்திரேலிய தொடர் என அடுத்தடுத்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய இர்பான் பதான், முகமது சமி போன்ற தலைசிறந்த வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றால் இந்திய அணியின் பலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.