கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் பெருமாள் போற்றப்படுகிறார். எனவே, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிருந்து முற்றிலும் விடுபடலாம். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராகப் பெருமாள் இருப்பதால், சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று பிறந்தவர் சனிபகவான். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர். இதனாலேயே சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு விரதம் இருக்கின்றனர்.
இதற்காக, அதிகாலையிலே எழுந்து, குளித்து நெற்றியில் திரு நாமமிட்டு, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி, மனம் உருக வழிபடுகின்றனர். அன்றையதினம் ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரண பலன் கிடைக்கிறது.
புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால், நோய் நொடி இல்லாமல் வாழலாம், தடைகள் உடையும், கல்வி, வேலை வாய்ப்பு, வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். இதனாலேயே பெருமாள் திருக்கோவில்களில் பக்தர்கள் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
எனவே, நாமும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு, வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்.