வைகை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் இரயில்களின் புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரயில்களின் புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டை – சென்னை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12662) மதுரையிலிருந்து இரவு 9:55 மணிக்கு புறப்படுவதற்குப் பதில், இரவு 9:45 மணிக்கு அதாவது 10 நிமிடம் முன்னதாக புறப்படும்.
சென்னை – செங்கோட்டை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12661) மதுரையிலிருந்து அதிகாலை 4:45 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக, அதிகாலை 4:30 மணிக்கு, அதாவது 15 நிமிடம் முன்னதாக புறப்படும்.
மதுரை – சென்னை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12636) மதுரையிலிருந்து காலை 7:10 மணிக்குப் பதிலாக காலை 6:40 மணிக்கு அதாவது 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12635) மதுரைக்கு இரவு 9:15 மணிக்குப் பதிலாக, இரவு 9:30 மணிக்கு வந்து சேரும்.
மதுரை – கோயம்புத்துார் இடையேயான எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16722) மதுரையிலிருந்து காலை 7:25 மணிக்கு பதிலாக காலை 07:00 மணிக்குப் புறப்படும்.
மதுரை – சென்னை இடையேயான பாண்டியன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12638) மதுரையிலிருந்து இரவு 9:35 மணிக்கு பதிலாக இரவு 9:20 மணிக்குப் புறப்படும்.
மதுரை – விழுப்புரம் இடையேயான எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 16868) மதுரையிலிருந்து அதிகாலை 4:05 மணிக்குப் பதிலாக, அதிகாலை 3:35 மணிக்கு, அதாவது 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
இந்த கால அட்டவணை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.