முதல் உலகக் கோப்பைப் போட்டி 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் ஒரு நாள் கிரிக்கெட் என்பது 60 ஓவர்களாக நடத்தப்பட்டது பின்னர் 1987 ஆம் ஆண்டு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. உலகக்கோப்பை என்பது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு நாடுகளால் நடத்தப்படும்.
இதன்படி 1975 ஆம் ஆண்டு இப்போட்டியை இங்கிலாந்து நடத்தியது. இது 60 வது ஓவர்களாக நடத்தப்பட்டது. இதன் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய அணிகள் விளையாடி, மேற்கிந்திய அணி கோப்பையை வென்றது.
1979 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை நடத்தியது. இதில் மேற்கிந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு சென்று மேற்கிந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்றது.
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை நடத்தியது. இதில் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு சென்றது. இதில் முதல் முறையாக இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுக் உலகக் கோப்பையை வென்றது.
1987 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு நாள் தொடரை 50 ஓவர்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் சேர்ந்து நடத்தியது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது.
1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் சேர்ந்து நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது.
1996 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தியது. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று இலங்கை அணிக் கோப்பையை வென்றது.
1999 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி தொடரை நடத்தியது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணித் தொடரை நடத்தியது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று ஆஸ்திரேலியா அணிக் கோப்பையை வென்றது.
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய நாடு தொடரை நடத்தியது. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றது.
2011 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசம் தொடரை நடத்தியது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு சென்று இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்று அசத்தியது.
2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துச் சேர்ந்து இத்தொடரை நடத்தியது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்று ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சேர்ந்து இந்தத் தொடரை நடத்தியது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குச் சென்றது. இதில் இங்கிலாந்துக் கோப்பையை வென்றது.
தற்போது 2023 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை நடத்தபடவுள்ளது.