திமிங்கலத்தின் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸ், உயர்ரக வாசனை திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில், வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் 1 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ், 1 முதல் 1.50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
திமிங்கில உமிழ் நீர் எனப்படும் அம்பர்கிரிஸ் (Ambergris) திமிங்கிலம் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.
திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது.
அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர் கிரீஸ் என்பர். இந்த அம்பர் கிரீசை சிலசமயம் திமிங்கிலங்கள் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம் வெளியேற்றுகிறது.
எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன. இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
திமிங்கில வாந்தி எனும் அம்பெர்கிரிஸ் கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும். இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடல்நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது.
இந்த ’அம்பர்கிரிஸ்’-ஐ உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காகவும், விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பில்கூட பயன்படுத்தப்படுகிறதாம். வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்தும் அரபு நாடுகளில் அம்பர்கிரிஸுக்கு தனி வரவேற்பும் உள்ளதாம்.
ஒரு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸின் சர்வதேச மதிப்பு ரூ.1 முதல் ஒன்றரை கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைவிட இதன் மதிப்பு பல மடங்காகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இதை ’கடல் தங்கம்’, ‘மிதக்கும் தங்கம்’ என்கிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன.