மாலத்தீவில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், முகமது முய்ஜு வெற்றி பெற்றார்.
மாலத்தீவில் 5.21 லட்சம் பேர் வசிக்கின்றனர். தீவில், தேர்தலின்போது வாக்களிக்க தகுதியானவர்கள் என மொத்தம் 2,25,486 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 9 -ம் தேதி அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், முகமது முய்ஜு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் 54.06 சதவீத வாக்குகள் பெற்றார்.
தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தோல்வி அடைந்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் முகமது முய்ஜு-வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முகமது முய்ஜு, நவம்பர் 17 -ம் தேதி பதவியேற்க உள்ளார். அதுவரை இடைக்கால அதிபராக இப்ராகிம் முகமது செயல்படுவார்.
தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ், இந்தியாவின் நட்பை விரும்பினார். இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கினார். இவரது ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகள் இநதியா – மாலத்தீவு உறவு மிகவும் சீராக இருந்தது.
ஆனால், மாலத்தீவில் அதிபர் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள முகமது முய்ஜு சீன ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்தியா – மாலத்தீவு இடையே ராஜாங்கரீதியிலான உறவுகள் வரும் காலத்தில் எப்படி இருக்குமோ என தெரியாது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.