உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் இரயில்வே பாலம் சுற்றுலா தலமாக உருவாக்கப்படுகிறது .
120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட செனாப் பாலம், 2024-ல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இது உலகின் மிக உயரமான இரயில் பாலம் ஆகும்.
ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மேலே 359 மீட்டர் (1,178 அடி) உயரத்தில் நிற்கும் இந்தப் பாலம், ஜம்மு-உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாலம் 1,315 மீட்டர் (4,314 அடி) நீளம் கொண்டது மற்றும் அதிக நில அதிர்வு செயல்பாடு, தீவிர வெப்பநிலை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றைத் தாங்கும் வகையில் 35,000 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலை காரணமாக செனாப் பாலத்தின் கட்டுமானம் சவாலான பணியாக இருந்தது. இருப்பினும், மேம்பட்ட பொறியியல் மற்றும் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி, பாலம் இப்போது வெற்றிகரமாக கட்டப்பட்டது.
உலகின் மிக உயரமான எஃகு வளைவு இரயில் பாலம் சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டு வருகிறது, பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலம் ஆற்றங்கரையில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 1.3-கிமீ ரயில் பாலம் ஆகும். பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் அதிகமாகும்.
இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017-ம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் தொடங்கியது. இரும்பு மற்றும் கான்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வளைவுப் பகுதி கட்டுமானம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. கிட்டத்தட்ட இரயில்வே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், செனாப் ரயில்வே பாலம் நேற்று கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்துவைக்கப்பட்டது.
இதன் மூலம் முதல் முறையாககாஷ்மீரின் ஸ்ரீநகர் நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்படவுள்ளது.
இந்தப் பாலம் கட்டுமானப் பணி மிக நீண்ட பயணம். இது உலகின் மிக உயர்ந்த இரயில்வே பாலம் கடின மலைப்பகுதி, மோசமான வானிலை என பல சவால்களை கடந்து இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் வரும் டிசம்பர், அல்லது 2024 சனவரி மாதம் ரயில் போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.