நாளை சித்தோர்கர் மற்றும் குவாலியருக்கு பிரதமர் மோடி பயணம்!
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை சித்தோர்கர் மற்றும் குவாலியருக்கு பிரதமர் மோடி பயணம்!

மத்தியப் பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  நாளை பயணம் மேற்கொள்கிறார்.

நாளை காலை 10:45 மணியளவில் பிரதமர் மோடி, இராஜஸ்தானின் சித்தோர்கரில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.30 மணியளவில் குவாலியர் செல்லும் பிரதமர் மோடி அங்கு சுமார் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

சித்தோர்கரில் பிரதமர்

எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கையாக, மெஹ்சானா – பதிண்டா – குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் பிரதமரால் அர்ப்பணிக்கப்படும். சுமார் ரூ.4500 கோடி செலவில் இந்த குழாய்  திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அபு சாலையில் உள்ள ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் எல்பிஜி ஆலையையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த ஆலை ஆண்டுக்கு 86 லட்சம் சிலிண்டர்களில் வாயுவை அடைத்து விநியோகிக்கும், மேலும் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் இயக்கத்தை ஆண்டுக்கு சுமார் 0.75 மில்லியன் கி.மீ குறைக்கும், இது ஆண்டுக்கு சுமார் 0.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவும். அஜ்மீர் பாட்லிங் ஆலையில் கூடுதல் சேமிப்பிடத்தையும் அவர் அர்ப்பணிப்பார்.

ரூ.1480 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள தாரா-ஜாலாவர்-தீந்தர் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை -12 (புதிய என்.எச் -52) இல் 4 வழிச் சாலையை பிரதமர் அர்ப்பணிக்கிறார்.

இந்தத் திட்டம் கோட்டா மற்றும் ஜாலாவர் மாவட்டங்களில் இருந்து சுரங்கங்களின் விளை பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்க உதவும். மேலும், சவாய் மாதோபூரில் ரயில்வே மேம்பாலம் (ஆர்ஓபி) இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையாக கட்டுவதற்கும், அகலப்படுத்துவதற்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ரயில்வே திட்டங்களில் சித்தோர்கர் – நீமுச் ரயில் பாதை மற்றும் கோட்டா – சித்தோர்கர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும். ரூ.650 கோடிக்கும் அதிகமான செலவில் இந்தத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன, மேலும் பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். இவை ராஜஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும்.

சுதேச தர்ஷன் திட்டத்தின் கீழ் நாத்வாராவில் உருவாக்கப்பட்ட சுற்றுலா வசதிகளை பிரதமர் அர்ப்பணிப்பார். வல்லபாச்சாரியார் பரப்பிய புஷ்திமார்க்கத்தைப்  பின்பற்றும் கோடிக்கணக்கானோரின் முக்கிய நம்பிக்கை மையமாக நாத்வாரா விளங்குகிறது. நாத்வாராவில் ஒரு நவீன ‘சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம்’ உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீநாத்ஜியின் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு அம்சங்களை அனுபவிக்க முடியும். மேலும், கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

குவாலியரில் பிரதமர்

நாடு முழுவதும் இணைப்பை அதிகரிப்பதற்கான மற்றொரு முயற்சியாக, சுமார் ரூ.11,895 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச் சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 1880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கிரஹப் பிரவேஷம் பிரதமரால் தொடங்கப்படும். பிரதமரின்  வீட்டு வசதித் திட்டம் – நகர்ப்புறத்தின் கீழ் சுமார் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகளையும் அவர் அர்ப்பணிக்கிறார்.

பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். குவாலியர் மற்றும் ஷியோபூர் மாவட்டங்களில் ரூ.1530 கோடி மதிப்பிலான ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்களால் இப்பகுதியில் உள்ள 720-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும்.

சுகாதார உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கையாக, ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ஒன்பது சுகாதார மையங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.150 கோடிக்கு மேல் செலவில் அவை உருவாக்கப்படும்.

ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை அர்ப்பணிப்பதோடு, வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், இந்தூரில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். உஜ்ஜைனியில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம், ஐஓசிஎல் பாட்டிலிங் ஆலை, குவாலியரில் அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் அர்ப்பணிக்கிறார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிக உயரமான இரயில் பாலம்!

Next Post

 துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மைப் பணி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies