தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை திருவெறும்பூர் மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தைத் தூய்மை செய்யப்பட்டது.
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்புப் படைகள் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்திற்குள் 300 பழ வகை மரக் கன்றுகள் உள்பட மொத்தம் 1,300 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த விழாவில், துப்பாக்கி தொழிற்சாலை வேளாண்மை இயக்குநர் ஷைரேஷ்குமார், திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.