தமிழக முதல்வரின் தனிச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு, வருமானவரித்துறை சம்மன் வழங்கியுள்ளது தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த மார்ச் 18 -ம் தேதி அன்று, திருப்பூர் லட்சுமி நகரில் அனிதா டெக்ஸ்காட் பின்னலாடை நிறுவனத்தில் 8 வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
காரணம், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து ஒப்பந்தங்கள் மூலம் தமிழக அரசுக்கு வழங்கியவர் இந்த சந்திரசேகரன் என்பதால்.
இந்த நிலையில்தான், திருப்பூரின் முக்கிய தொழிலதிபரான அனிதா டெக்ஸ்காட் சந்திரசேகரன் வீடு அலுவலகம், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில், சுமார் 8 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் சந்திரசேகரன் உள்ளார். மேலும், சந்திரசேகரனின் உடன் பிறந்த சகோதர் கவின் நாகராஜன், மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவரது வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் தனிச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு, வருமானவரித்துறை சம்மன் வழங்கியுள்ளது. அனிதா ஹெல்த் கேர் நிறுவனம் ரெய்டு தொடர்பாகவே, உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு சம்மன் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, உமாநாத் ஐ.ஏ.எஸ் பத்திரிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை.