கடும் மழை காரணமாகக் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நீராட வந்தார்கள் ஏமாந்து போனார்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசானது முதல் கடும் மழை பெய்து வருகிறது. கேரளா மற்றும் தென்காசியில் கன மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், பாதுகாப்பு கருதிக் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அருவியில் நீராட வந்தார்கள் ஏமாந்து போனார்கள்.
இந்த நிலையில், மழை அளவு குறைந்ததால், அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து, இயல்பு நிலைக்கு வந்தது. இதனால், அருவியில் நீராடச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குற்றலாத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடத் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.