ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் தனிநபர் இறுதிப் போட்டியில் டேரியஸ் கினான் சென்னாய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கினான் சென்னாய் ஒரேப் பிரிவில் இரண்டுப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் தனிநபர் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி சார்பாக கினான் சென்னாய் பங்குப்பெற்றார்.
கினான் சென்னாய் 32 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். சீன அணியின் யிங் கியும் 46 புள்ளிகளைப் பெற்று தங்கமும், குவைத் அணியின் தலாத் அல்ராஷிதி 45 புள்ளிகளைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இது இந்தியாவின் ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் பிரிவின் 22 வது பதக்கம் ஆகும். மேலும் இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது அந்த அணியின் கினான் சென்னாவும் இருந்ததால் ஒரே நாளில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.