ஐ.என்.எஸ். எனப்படும் ‘இந்திய செய்தித்தாள் சொசைட்டியின் தலைவராக, ஆஜ் சமாஜ் நாளிதழின் இயக்குனர் ராகேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய செய்தித்தாள் சொசைட்டியில், தேசிய அளவில் 800 பத்திரிகைகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன.
இந்த சொசைட்டியின் 84வது ஆண்டு பொதுக் கூட்டம், சனிக்கிழமை காணொலி மூலம் நடந்தது.
இக்கூட்டத்தில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான ஐ.என்.எஸ். தலைவராக, ஆஜ் சமாஜ் நாளிதழின் இயக்குனர் ராகேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக, மாத்ருபூமி நிர்வாக இயக்குனர் எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார், உதவித் தலைவராக, சன்மார்க் நாளிதழின் விவேக் குப்தா, கவுரவப் பொருளாளராக அமர் உஜாலா நாளிதழின் தன்மய் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சொசைட்டியின், 41 பேர் அடங்கிய செயற்குழுவில், பி.வி.சந்திரன் – மாத்ருபூமி, ஜெயந்த் மம்மன் மேத்யூ – மலையாள மனோரமா, பிஜு வர்கீஸ் – மங்களம், ஹர்ஷா மேத்யூ – வனிதா, டாக்டர் ஆர்.இலட்சுமிபதி – தினமலர், இல. ஆதிமூலம் – ஹெல்த் அன்ட் தி ஆன்டிசெப்டிக், இல.ஆதிமூலம் – ஹெல்த் அண்டு தி ஆன்டிசெப்டிக், விவேக் கோயங்கா – இந்தியன் எக்ஸ்பிரஸ், எஸ்.பாலசுப்ரமணியன் ஆதித்யன் – தினத்தந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.