ஆசியா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது. இதில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்று ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக தஜிந்தர் பால் சிங் மற்றும் சாஹிப் சிங் ஆகியோர் பங்குப்பெற்றார்.
தஜிந்தர் பால் சிங் 20.36 மீட்டர் தூரம் குண்டை எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தணதாக்கியுள்ளார். இதற்க்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந்தர் சிங் இதே குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரரான சாஹிப் சிங் 18.62 மீட்டர் தூரம் வரை எரிந்து 8 வது இடத்தைப் பிடித்ததால் பதக்கம் கிடைக்காமல் போனது.
இந்த ஆசியக் கோப்பையில் இது இந்தியாவிற்கு 13 வது தங்கப் பதக்கம் ஆகும்.