ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!
Sep 9, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

மெஹ்சானா-பாடிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயுக் குழாய் திட்டத்தையும் அர்ப்பணித்தார்!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்துக்கு 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மெஹ்சானா-பாடிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயுக் குழாய் திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. எனவே, ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் 7,000 ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி இருக்கிறார். சித்தோர்கரில் நடந்த இவ்விழாவில், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மெஹ்சானா-பாடிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயுக் குழாய் திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். இத்திட்டம் சுமார் 4,500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, அபு சாலையில் உள்ள ஹெச்.பி.சி.எல்.-ன் எல்.பி.ஜி. ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஆலை ஆண்டுக்கு 86 லட்சம் சிலிண்டர்களை விநியோகிக்கும். இது நிகரக் குறைப்புக்கு வழிவகுப்பதோடு, ஆண்டுக்கு சுமார் 0.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வையும் குறைக்க உதவும். மேலும், ஐ.ஓ.சி.எல்., அஜ்மீர் பாட்டில் ஆலையில் கூடுதல் சேமிப்பிடத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார். இது தவிர, தேசிய நெடுஞ்சாலை-12-ல் (புதிய தேசிய நெடுஞ்சாலை 52) தராஹ்-ஜலவர்-தீந்தர் பிரிவில் 1,480 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட 4 வழிச் சாலையையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

இத்திட்டம் கோட்டா மற்றும் ஜலவார் மாவட்டங்களில் இருந்து சுரங்கங்களின் விளைபொருட்களின் போக்குவரத்தை எளிதாக்க உதவும். மேலும், சவாய் மாதோபூரில் ரயில்வே மேம்பாலம் 2 வழிச்சாலையில் இருந்து 4 வழிச்சாலையாக அமைக்கவும், அகலப்படுத்தவும் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட உதவும். அதேபோல, பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களில், சித்தோர்கர் – நீமுச் ரயில் பாதை மற்றும் கோட்டா – சித்தோர்கர் மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும்.

650 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் இத்திட்டங்கள் முடிக்கப்பட்டு, இப்பகுதியில் இரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். இது ராஜஸ்தானில் உள்ள வரலாற்றுத் தளங்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்த உதவும். மேலும், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நாத்துவாராவில் உருவாக்கப்பட்ட சுற்றுலா வசதிகளையும் பிரதமர் மோடி அர்ப்பணித்தார். புனித வல்லபாச்சார்யாவால் பிரச்சாரம் செய்யப்பட்ட புஷ்டிமார்க்கின் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் முக்கிய மையமாக நாத்வாரா விளங்குகிறது. மேலும், ஸ்ரீநாத்ஜியின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கக்கூடிய நவீன ‘சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம்’ நாததுவாராவில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Tags: PM ModiRajasthanlays foundation7000 crore projects
ShareTweetSendShare
Previous Post

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Post

இன்னொரு பிடி உஷா!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies