சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான 1500 மீட்டர் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் சார்பாக ஹர்மிலன் பெயின்ஸ் கலந்துக் கொண்டார். இவர் பந்தய இலக்கை 4:12:74 நிமிடங்களில் எட்டினார். இதன் மூலம் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.
ஹர்மிலன் பெயின்ஸ்ஸின் தந்தை அமந்தீப் பெயின்ஸ் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்றவர் ஆவார்.
அதேபோல், அவரது தாய் மாதுரி சக்சேனா 2002 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார்.
தந்தை மற்றும் தாய் இருவரும் ஓட்டப்பந்தய வீரர்கள் என்பதால், அவர்களிடமிருந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு, தற்போது இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதித்துள்ளார்.